MARC காட்சி

Back
சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்
245 : _ _ |a சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில் -
246 : _ _ |a சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில்
520 : _ _ |a திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னனாகிய இராஜசிம்மன் (கி.பி.690-728) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என அறியப்படுகிறது. இக்கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்குரிய கட்டட கலையம்சங்களை ஆங்காங்கே கொண்டு விளங்குகிறது. இராஜசிம்மன் தன்னுடைய கைலாசநாதர் கோயிலில் முந்நூறு பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளான். அவன் எல்லா சமயங்களையும் ஆதரித்துள்ளான் என்பதற்கு இந்தப் பெயர்களே சாட்சியாக விளங்குகின்றன. எனவே அப்பல்லவ மன்னன் சந்திரநாதர் என்னும் சமணசமய தீர்த்தங்கரருக்கு கோயில் எடுப்பித்துள்ளான் என்பது அவனது சமயப்பொறையைக் காட்டுகிறது.
653 : _ _ |a சந்திரப்ரபா கோயில், சந்திரநாதர் கோயில், திருப்பருத்திக்குன்றம் சந்திரப்ரபா கோயில், திருப்பருத்திக்குன்றம் சந்திரநாதர் கோயில், இராஜசிம்மனின் சமணக்கோயில், காஞ்சிபுரம் சமணர் கோயில்கள், திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயில்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன்
909 : _ _ |a 6
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 12.8277962
915 : _ _ |a 79.6852904
916 : _ _ |a சந்திரநாதர்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சந்திரநாதர் என்னும் சமணத்தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது.
932 : _ _ |a சந்திரநாதர் கோயில் கருவறை, அந்தராளம், முன்மண்டபம், அதனுடன் இணைந்த உள்திருச்சுற்றாலை ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். திருச்சுற்றாலைச் சுவரின் அடித்தளத்தில் ஒரு வரிசை மட்டிலும் கருங்கல்லாலும், பிறபகுதிகள் மணற் கல்லாலும் கட்டப்பட்டிருக்கின்றன. பல்லவர் காலத்துக் கட்டடக் கோயில்கள் பெரும்பாலானவற்றில் இப்பொதுத் தன்மையினைக் காணலாம். இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருப்பருத்திக்குன்றம் திரைலோக்யநாதர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து திருப்பருத்திக்குன்றம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம்
938 : _ _ |a காஞ்சிபுரம், நத்தப்பேட்டை, வாலாஜாபாத், திருமால்புரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000044
barcode : TVA_TEM_000044
book category : சமணம்
cover images TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_நுழைவாயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_கோயில்-வளாகம்-0002.jpg

TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_முழுத்தோற்றம்-0003.jpg

TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_புணரமைக்கப்பட்ட-கோயில்-0004.jpg

TVA_TEM_000044/TVA_TEM_000044_சந்திரநாதர்-கோயில்_விமானம்-0005.jpg